48 ஒளடதங்களுக்கான விலை குறைப்பு விரைவில்

334 0

medicine-exports48 ஒளடதங்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 48 ஒளடதங்கள் நிர்ணய விலைகளுக்குள் உள்ளடக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.