வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்படவுள்ளது.
சோஷலிச இளைஞர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
சஜித் பிரேமதாச தான்தோன்றித்தனமாக தொழில்வாய்ப்புக்களை வழங்குவதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.