தாம் ஒருபோதும் வரலாற்றை மறக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை சேவையாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நாடாளுமன்ற விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கமானது குறுகிய காலத்தில் பல சவால்களை வெற்றி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தினால் செய்ய முடியாது போன பல விடயங்களை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.