இராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான தமிழீழ விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினரது குடும்ப அங்கத்தவர்களுக்கு ஓய்வு பெற்ற மேஜர் விமல் விக்ரமவினால் நட்ட ஈடு வழங்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுக்கமைய, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தன முன்னிலையில் இந்த நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குடும்ப உறுப்பினர்களுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஓய்வு பெற்ற மேஜர் விமல் விக்ரமவிற்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.