மோடி தமிழகம் செல்வார்?

338 0

moodiiஇந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் நாட்டுக்கானவிஜயத்தை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நீண்ட நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை குறித்த நம்பகமான தகவல்கள் எவையும் வெளியாக்கப்படவில்லை.

அத்துடன் அவரை சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் நேரடியாக தமிழகம் சென்று அவரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.