அலெப்போவில் தற்காலிக மோதல் தவிர்ப்பு ஒன்றை ரஷ்யா அறிவித்துள்ளது.
மனிதாபிமான பணிகளுக்காக இந்த மோதல் தவிர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு மணி நேரங்களுக்கு இந்த மோதல் தவிர்ப்பு அமுலில் இருக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
எனினும் மனிதாபிமான பணிகளை மேற்கொள்வதற்கு இந்த காலப்பகுதி போதாது என்று, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த தினம் அலெப்போவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பலியாகினர்.
இதனை அடுத்தே இந்த மோதல் தவிர்ப்பு அமுலாக்கப்பட்டுள்ளது.