இலங்கை சென்றுள்ள ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசாக் நாளைதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு நாளை அவரை கொழும்பில் வைத்து சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சிறுபான்மை மக்கள் தற்போது முகம் கொடுக்கின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து விளக்கமளிக்கப்படும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளை மறுதினம் றீட்டா ஐசாக் தமது விஜயத்தை நிறைவு செய்கிறார்.
இதன் நிமித்தம் அவர் விசேட ஊடக சந்திப்பு ஒன்றையும் ஒழுங்கு செய்துள்ளார்.
அவரது 10 நாட்களுக்கான விஜயத்தின் போது மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கை, அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.