நாட்டின் பொருளாதார சீரடையும் வரையில், வரிவிலக்கு மற்றும் வரிச்சலுகை என்பவற்றை கைவிடுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி அரசாங்கத்தை கோரியுள்ளது.
அதன் பொது செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, இது தொடர்பான கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமையை மக்கள் அறிந்துள்ளனர்.
பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் வேதன அதிகரிப்பின்றி சிரமப்படுகின்றனர்.
எட்டு வருடங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் இன்னும் குடியேற்றப்படாதுள்ளனர்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரிச்சலுகை ஊடாக பல கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இது மக்களை சினமடைய செய்துள்ளது.
இந்த நிலையில் அரசாங்கம் இவ்வாறான சலுகைகளை குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த வேண்டும் என்று ஆனந்த சங்கரி தமது கடிதத்தில் கோரியுள்ளார்.