தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி, எனும் அமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 22.6.2019 சனிக்கிழமை யேர்மனி நொய்ஸ் என்னும் நகரத்தில் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.
யேர்மனியில் உள்ள தமிழாலய மாணவ மாணவிகளை பல வயதுப்பிரிவுகளாக வகுத்து, ஆண்கள் பெண்கள் அனைவருக்குமான உதைபந்தாட்டப் போட்டியாக இவ் விளையாட்டுப் போட்டி அமைந்திருந்தது. 62 அணிகள் பல வயதுப் பிரிவுகளாக இப் போட்டியில் களமிறங்கினர். யேர்மனிய தேசியக்கொடியும், தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றிவைக்கப்பட்ட பின்பு தமிழ்க் கல்விக் கழகக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு இவ் உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகின.
ஒரே நேரத்தில் ஆறு மைதானங்களில் உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனிய நடுவர்களால் நடாத்தப்பட்டது. புற்தரை மைதானங்களில்; விளையாட்டு வீர, வீராங்கணைகள் மிக ஆர்வமாகவும் சிறப்பாகவும் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.
11 வயதிற்;கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்.
முதலாமிடத்தை மேபுஸ் தமிழாலயமும்
இரண்டாவது இடத்தை முன்சன்கிளட்பாக் தமிழாலயமும்.
மூன்றாமிடத்தை லெவக்குசன் தமிழாலயமும் தமதாக்கிக் கொண்டனர்.
13 வயதிற்;கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்.
முதலாமிடத்தை கஸ்லிங்கவுசன் தமிழாலயமும்
இரண்டாவது இடத்தை டீலன்பூர்க் தமிழாலயமும்.
மூன்றாமிடத்தை வூப்பெற்றால் தமிழாலயமும் தமதாக்கிக் கொண்டனர்.
16 வயதிற்;கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்
மூன்றாமிடத்தை வூப்பெற்றால் தமிழாலயம் தமதாக்கிக் கொண்டது.
இறுதி மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெறும் நொய்ஸ்; மைதானத்தில் 21.9.2019 சனிக்கிழமை அன்று முதலாமிடத்திற்கும் இரண்டாவது இடத்திற்குமான போட்டிகள் நடைபெறும். இங்கு போட்டியிடுவதற்கு வாறன்டோர்வ்ப் தமிழாலயமும் டிலன்பூர்க் தமிழாலயமும் தெரிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
19 வயதிற்;கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்.
முதலாமிடத்தை பிராங்போட்; தமிழாலயமும்
இரண்டாவது இடத்தை முன்சன்கிளட்பாக்; தமிழாலயமும்.
மூன்றாமிடத்தை எசன் தமிழாலயமும் தமதாக்கிக் கொண்டனர்.
21 வயதிற்;கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்.
முதலாமிடத்தை கிறீபில்ட்;; தமிழாலயமும்
இரண்டாவது இடத்தை மேபுஸ்;; தமிழாலயமும்.
மூன்றாமிடத்தை காகன்; தமிழாலயமும் தமதாக்கிக் கொண்டனர்.
21 வயதிற்;கு மேற்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான போட்டியில்
முதலாவது இடத்தை வூப்பெற்றால் அணியும்
இரண்டாவது இடத்தை வுளுஊ டோட்முண்ட் அணியும்
மூன்றாவது இடத்தை லெவக்குசன் அணியும் பெற்றுக் கொண்டனர்.
13 வயதிற்;கு உட்பட்ட பெண்கள் அணிகளில்
முதலாவது இடத்தை மேபுஸ் தமிழாலயமும்.
இரண்டாவது இடத்தை நொய்ஸ் தமிழாலயமும்
மூன்றாவது இடத்தை வூப்பெற்றால் தமிழாலயமும் தமதாக்கிக் கொண்டனர்.
16 வயதிற்;கு உட்பட்ட பெண்கள் அணிகளில்
முதலாவது இடத்தை முன்சன்கிளட்பாக் தமிழாலயமும்.
இரண்டாவது இடத்தை வூப்பெற்றால் தமிழாலயமும்
மூன்றாவது இடத்தை எசன் தமிழாலயமும் தமதாக்கிக் கொண்டனர்.
16 வயதிற்;கு மேற்பட்ட பெண்கள் அணிகளில்
முதலாவது இடத்தை காஸ்ட் தமிழாலயமும்.
இரண்டாவது இடத்தை மேபுஸ்; தமிழாலயமும்
மூன்றாவது இடத்தை நொய்ஸ் தமிழாலயமும் தமதாக்கிக் கொண்டனர்.
மேலும் யேர்மனியில் உள்ள வடமத்திய மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி வருகின்ற சனிக்கிழமை 29.6.2019 யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் நடைபெறவுள்ளது என்பதனையும் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினர் அறியத் தந்திருக்கின்றார்கள்.