நாட்டை நேசிக்கின்ற, மக்களுக்குப் பாதுகாப்பை வழங்க முடியுமான, தேர்தலை வெற்றி கொள்ள முடியுமான ஒரு வேட்பாளரை தாம் முன்னிருத்தப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
நாட்டு மக்களை நேசிக்கும் ஒரு தலைவரை நாம் தேடுகின்றோம் எனக் கூறிய மஹிந்த ராஜபக்ஸவிடம், தற்பொழுது அப்படியான ஒருவர் தீர்மானிக்கப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது, இன்னும் இல்லை எனவும் அவர் பதிலளித்தார்.
மல்வத்து பீட மகாநாயக்கரிடம் ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக்ஸ இதனைக் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்த ஒரு வேட்பாளரை மாத்திரம் களமிறக்குவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.