சீனா இலங்கை இராணுவத்துக்கு 120 மில்லியன் யுவான் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளது.
இது தொடர்பான இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர் சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் சாங் வாங்ஹுவானை சந்தித்த போது, இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்தாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.