சிறீலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உறுதியளித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ்-பிம்ரெக்ஸ் மாநாடுகளின் போது, நேற்று முன்தினம் மாலை இரண்டு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர். அதன்போதே ரஷ்ய அதிபர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உலக நாடுகள் சிறீலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது, ரஷ்யா சிறீலங்காவுக்கு ஆதரவாக எந்தவித நிபந்தனைகளுமின்றிச் செயற்பட்டமைக்கு மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்தார்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.