விமல் வீரவன்ச எம்.பி எனக்கெதிராக தெரிவித்த குற்றச்சாட்டுக்களை ஒப்புவித்தால் நான் அரசியலில் இருந்து விலகுவேன். அதேபோன்று அவரால் அதனை ஒப்புவிக்க முடியாவிட்டால் அவர் அரசியலில் இருந்து விலகுவாரா என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து இந்த சபையில் முஸ்லிம் மக்களுக்கும் எனக்கும் எதிராக வைறாக்கியத்துடனும் குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலும் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கும் மோசமான செயலை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், சிறப்புரிமை தொடர்பான பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.