முஸ்லிம்களின் பிறப்பு வீதம் தொடர்பில் தேவையற்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவாக்கப்படுவக்கப்படுகின்றது. இதுதொடர்பாக உதய கம்பன்பில முன்வைக்கும் புள்ளிவிபரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றில் தெரிவித்தார்.
எதிர்கட்சி உறுப்பினரான உதய கம்மன்பில செய்தியாளர் சந்திப்பொன்றில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி, முஸ்லிம்களின் பிறப்புவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அவர்களின் சனத்தொகை பாரியளவில் அதிகரித்துள்ளது என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார்.
அவர் முன்வைக்கும் புள்ளிவிபரங்கள் உண்மைக்குப் புறம்பானவை. இதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றார். அவருடைய தகவல்கள் தவறானவை என்பதை நிரூபிக்க தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் அழைப்பு விடுக்கின்றேன்.
மேலும் முஸ்லிம்களின் பிறப்புவீதம் அதிகரித்து வரும் அதேநேரம், சிங்களவர்களுக்கு எதிராக கருத்தடைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு கூறப்படும் கருத்துக்கள் யாவும் கட்டுக்கதையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.