தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக ஒருசிலர் குற்றஞ்சுமத்துகிறார்கள்.ஆனால் பொலிஸ் விசாரணை குழுவில் இன்னும் என் மீது எந்த முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட வில்லை.
அதேபோன்று பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கென எனக்கு இன்னும் அழைப்ப விடுக்கப்பட வில்லை.அழைப்பு வந்தால் எனக்கு தெரிந்த சாட்சிகளை நிச்சயமாக வழங்குவேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாற குறிப்பிட்ட அவர் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ;
கேள்வி : கடந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் கட்சிக்குள் முரண்பாடுகள் உள்ளதா ?
பதில் : ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைபாட்டில் உள்ளனர். அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள். அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. வேட்பாளர் யார் என்பது குறித்து கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.
கேள்வி : முஸ்லிம் பிரதிநிதிகள் தமது அமைச்சுக்களை கூட்டாக ராஜினாமா செய்திரந்த நிலையில் மீண்டும் கபீர் ஹாஷிம் மற்றும் ஹலீம் ஆகியவர்கள் அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ளனர். முஸ்லிம் பிரதிநிதிகளிடையே கருத்து முரண்பாடுகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா?
பதில் : முஸ்லிம் பிரதிநதிகளிடம் எந்த கருத்து முரண்பாடும் கிடையாது. அனைத்து தரப்பினருதும் வேண்டுகோளின் பேரிலேயே இருவரும் அமைச்சு பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுக்கொண்டனர். அமைச்சுக்களை பொறுப்பேற்பதற்கு முன்னர் சகல முஸலிம் பிரதிநதிகளுடனும் கட்சி தலைவருடனும் கலந்துரையாடியதன் பின்னரே இருவரும் இந்த தீர்மானத்தை எடுத்தனர்.
கேள்வி : மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைபாடு என்ன?
பதில் : நம்பிக்கையில்லா பிரேரணையை நிச்சயமாக எதிர்க்கொள்வோம். பிரேரணையின் முடிவும் எங்களுக்கு சாதமாகவே இருக்கும். அதற்கான பலமும் எம்மிடம் உள்ளது.
கேள்வி : தாக்குதல் சம்பவங்களுக்கும் உங்களுக்கம் தொடர்புள்ளதாக எதிரணியனர் குற்றஞ்சுமத்துகின்றனர். இது தொடர்பில் நீங்கள் என்ன நிலைப்பாட்டில் உள்ளீர்கள் ?
பதில் : தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைண நடவடிக்கைகள் பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் விசாரணை செய்யவென்று பொலிஸ் விசாரணை குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானவொரு நிலைமையில் என்மீதும் ஒருசிலர் குற்றஞ்சுமத்துகின்றனர். ஆனால் இதுவரையில் பொலிஸ் விசாரணை குழுவில் என்மீது எந்த முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட வில்லை.
ஒருபுறம் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றது. பல்வேறு உண்மை தகவ்லகளும் இதனூடாக வெளியாகி வருகின்றன. தெரிவுக்குழுவின் விசாரணைக்கு என்னை இன்னும் அழைப்பு விடுக்கப்பட வில்லை. அழைப்பு வந்தால் விசாரணைகளின் போது என்க்கு தெரிந்த விடயங்களை குறிப்பிடுவேன் என்றார்.