வீரர்களுடன் இணைந்து யோகாசனம் செய்து அசத்திய நாய்கள்

487 0

காஷ்மீரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் இணைந்து நாய்கள் யோகாசனம் செய்து அசத்தின.

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ‘இதய ஆரோக்கியத்துக்காக யோகா’ என்ற கருத்தை மையமாக கொண்டு யோகா கொண்டாடப்படுகிறது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு யோகா முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்தார்.
யோகா செய்வதன் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் பின்னர் அவர் உரையாற்றினார். மும்பையில் உள்ள இந்தியா கேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.

இதேபோல் சென்னை மெரினா கடற்கரையில் இந்திய கடற்படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் யோகாசனங்களை செய்து அசத்தினர்.

இதேபோல் ஜம்முவில் இன்று எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் யோகாசனத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பயிற்சி பெற்ற நாய்களும் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தின.