விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்திற்கு வருகிறது

388 0

கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

விஜயகாந்தின் சொத்து ஏல அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழில் வெளியிட்டுள்ளது. அதில், கடன் பாக்கியை செலுத்தாததால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26-ல் ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மதுராந்தகம் மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலத்திற்கு வருகிறது. சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் 4,651 சதுர அடி நிலம், வணிக கட்டிடமும் ஏலத்துக்கு விடப்படுகிறது. ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. கடன் பாக்கி, வட்டி, இதர செலவுகளை வசூலிக்க விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.