கூட்டு ஒப்­பந்­தத்தில் அதி­க­ரிக்­கப்­பட்ட சம்­ப­ளத்­துக்கு மேல­தி­க­மாகப் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வரவு செல­வுத்­திட்­டத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட  ஐம்­ப­து­ ரூபா கொடுப்­ப­னவைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு காலம் தாழ்த்­தாது நிதி அமைச்சு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

ஏப்ரல் மாதம் முதல் இது­வரை காலப்­ப­கு­தியில் இந்த கொடுப்­ப­னவு வழங்­கப்­ப­ட­வில்லை. ஆரம்­பத்தில் இவ்­வி­டயம் தொடர்பில் பாரிய அழுத்­தங்கள் கொடுக்கப்­பட்­ட­போதும் அது­பற்­றிய அக்­கறை மழுங்­கி­விட்­ட­தாக  பெருந்­தோட்ட கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்­சரும் இலங்கை தேசிய தோட்ட தொழி­லாளர் சங்கத்தின் பொதுச் செய­லா­ள­ரு­மான வடிவேல் சுரேஸ் தெரி­வித்தார்.

இலங்கை தேசிய தோட்ட தொழி­லாளர் சங்­கத்தின் இரத்­தி­ன­புரி மாவட்ட மாநில தலை­வர்­களின் கூட்டம் மாநில அமைப்­பாளர் தர்­ம­தாச த சில்வா, மாநில இயக்­குனர் சிவ­லிங்கம் சிற்­ற­ரசு ஆகி­யோரின் ஏற்­பாட்டில் பலாங்கொடையில் நடை­பெற்­றது.

இக் கூட்­டத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார். இக்கூட்­டத்­துக்கு  இலங்கை தேசிய தோட்ட தொழி­லாளர் சங்­கத்தின் நிர்­வாக செய­லாளர் வே.ருத்­தி­ர­தீபன், தேசிய அமைப்­பாளர் எஸ்.விஜ­ய­குமார் உட்­பட மாநி­லங்­களின் தலை­வர்கள், தலை­விகள் உள்­ளூராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்­டனர்.

இதன்போது தொழிற்­சங்­கத்தின் எதிர்­கால நட­வ­டிக்கை தொடர்­பா­கவும் தோட்­டங்­களில் பெருந்­தோட்ட கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்சின் மூலம் முன்­னெ­டுக்­க­ப்படும் அபி­வி­ருத்­திகள் தொடர்­பா­கவும் ஆரா­யப்­பட்­டது.

இங்கு தொடர்ந்து பேசிய இரா­ஜாங்க அமைச்சர்,

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்பில் கடந்த காலங்­களில் பல போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  27 சுற்று பேச்­சு­வார்­த்­தைகள் நடை­பெற்­றன. இதில் அனைத்து மக்­களும் பிர­தேச வேறு­பா­டுகள் இன்றி  போராட்­டங்­களை நடத்­தி­ய­தோடு இளைஞர் யுவ­திகள் மற்றும் ஆசி­ரி­யர்­களின் ஒத்­து­ழைப்பும் கிடைத்­தது.  இதில் அனை­வ­ரி­னது கோரிக்­கையும் ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்­பாக இருந்­தது. எனது கோரிக்­கையும் அது­வா­கவே இருந்­தது.

இருந்தும் இதற்கு கம்­ப­னிகள் ஒத்­து­வ­ரா­த­தினால் இரண்­டுக்கும் இடைப்­பட்ட ஒரு தொகையில் தொழி­லா­ளர்­க­ளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் 700 ரூபா அடிப்­படை சம்­ப­ளமும் 50 ரூபா விலைக் கொடுப்­ப­னவும் மேல­திக இறாத்­த­லுக்கு தேயிலை 40 ரூபாவும் இறப்­ப­ருக்கு 45ரூபாவும் கட்­டாயம் கிடைக்கும் வகையில் ஒப்­பந்தம் கைச்சாத்­தி­டப்­பட்­டது.

எனினும் மேலும் சம்­பள அதி­க­ரிப்பு வழங்க வேண்டும் என்ற மலை­யக தலை­வர்­களின் வேண்­டு­கோ­ளுக்கு அமைய நாள் ஒன்­றுக்கு 50 ரூபா பட்ஜெட் மூலம்  நிதி அமைச்சின் ஊடாக வழங்­கு­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்டு உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.இந்த கொடுப்­ப­னவு ஏப்ரல் மாதம் முதல் வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்­டிய நிலையில் அது இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனை உட­ன­டி­யாக வழங்க நிதி அமைச்சு நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை வழங்க மலையக ஏனைய தலைமைகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இன்னும் ஒரு சரியான  முடிவு வராமலிருப்பது வேதனைக்குரியது. இதற்கான பொறுப்பு மலையகத்தின் அனைத்து தரப்பிடமும் உள்ளது என்றும் கூறினார்.