முஸ்லிம்களின் மத்ரஸாக்கள் தொடர்பில் இன்னும் அரசாங்கத்தினால் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தினால் மத்ரஸா குறித்து எந்தவிதமான தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படாத நிலையில், கொழும்பு – மட்டக்குளிய பகுதியில் மத்ரஸா ஒன்று மீண்டும் திறக்கப்பட்டமையையடுத்து அங்கு இயல்பற்ற சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மத்ரஸாவில் 800 மாணவர்கள் கற்கின்றனர். மாதம் ஒன்றுக்கு இம்மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் ஊடாக 1,300 ரூபாவைச் செலுத்துகின்றனர்.
என்றாலும், குறித்த மத்ரஸாவை நீதிமன்ற உத்தரவு வரும் வரை, மூடி வைக்குமாறு பொலிஸாரிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.