அடிப்படைவாதிகளின் குண்டு தாக்குதலை தொடர்ந்து குறுகிய காலத்திற்குள் பாதுகாப்பு தரப்பினர் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளார்கள். மக்கள் மனங்களில் உள்ள அச்ச நிலையினையே தற்போது மாற்றியமைக்க வேண்டும். நடைமுறையில் உள்ள அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது முக்கியமாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அவசரகால சட்டத் அமுலில் உள்ளமையினாலே பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றார்கள். அவசரகால சட்டம் நீக்கப்பட்டால் இப்பணிகளை பொலிஸார் மாத்திரமே முன்னெடுக்க வேண்டும். இது கடினமான விடயமாகும். தேசிய பாதுகாப்பு விடயத்தில் அனைவரும் அரசியல் தேவைகளையும், கட்சிகளின் தேவைகளையும் மறந்து பொதுவாக சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.