கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாமெனக் கோரி முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இன்று (வியாழக்கிழமை) காலை ஒன்றுகூடிய முஸ்லிம்கள், இவ்வாறு போராட்டதை முன்னெடுத்துள்ளது.
மாநகர மேயர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளடங்களாக கல்முனை வர்த்தக சமூகம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதத் தலைவர்கள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம், இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில், அவர்களுக்கு எதிராகவே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.