தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காவன்றி நாட்டுக்காக முன்வரும் தலைவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஒத்துழைப்பு வழங்க தான் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாளர் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
சிலாபம் பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சிக்காக புதிய வேட்பாளர் ஒருவர் தேவை என்று கட்சியின் உள்ளே பாரியளவில் குரல் எழுப்பப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது நாட்டுக்கு தேவையாக இருப்பது நாட்டை நேசிக்கும் ஒருவரே என்று திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
அதேநேரம் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு தனக்கு தேவையான தகுதிகள் அனைத்தும் இருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாளர் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.