தொழில், வாழ்விடங்களை இழக்கும் தோட்ட மக்கள் – திலகராஜ்

279 0

அரச கூட்டுத்தாபனங்கள், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழான தோட்டங்களில் மாத்திரம் அன்றி ஐம்பது ஏக்கர் தோட்டங்கள் என அழைக்கப்படும் தனியார் தோட்டங்களிலும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். ஆனால், அத்தகைய கம்பனிகள் மூடப்பட்டு வெளியாருக்கு விற்கப்படுவதால் குறித்த தோட்டத்தில் காலம்காலமாக வாழ்ந்த மக்கள் தொழிலை இழக்க நேரிட்டுள்ளதுடன் அவர்களின் வாழ்விடங்களை அமைக்க காணி உரிமையையும் இழக்கின்றனர். இது குறித்து அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை காணி மீட்டல் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்தச்சட்டம் மீதான விவாதம் இன்று பாராளுமன்றில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.