கிளிநொச்சியில் காணாமல்போன வர்த்தகர் பொலிஸில் சரணடைந்தார்(காணொளி)

432 0

காணாமல் போனதாகக் கூறப்பட்ட கிளிநொச்சி வர்த்தகர், தானாகவே கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தைச் சென்றடைந்தார்.

கிளிநொச்சிபிரபல வர்த்தகரான கிருஸ்ணசாமி ரதீசன் என்பவர் கடந்த 12ஆம் திகதியிலிருந்து காணாமல்போனதாக குறித்த வர்த்தகரின் உறவினர்களால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டடிருந்தது.

இதற்கமைய கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இருந்த நிலையில் இவர் கடத்தப்பட்டிருப்பார் என ஒருசிலரும், கடன்தொல்லையினால் தலைமறைவாகி இருப்பார் என ஒரு சிலரும் பொலிசாருக்கு வழங்கிய தகவல்களுக்கு அமைவாக விசாரைணைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முற்பகல் குறித்த வர்த்தகர் தானாகவே கிளிநொச்சிப் பொலிஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதனால் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட அவரது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அவரது பணியாளர்கள் சந்தோசக்களிப்பில் ஆரவாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்பு குறித்த வர்த்தகரை கிளிநொச்சிப் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பதில்பொறுப்பதிகாரி அனந்த சுமணசிறி விசாரணைக்கு உட்படுத்தியத்தில் தான் தனது வேலைப்பளு காரணமாக சரியாக நித்திரைகளின்றி மன உளைச்சல் காரணமாக தான் செய்வதறியாது பேரூந்தில் ஏறி வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களிற்கு பேருந்திலையே பயணம் செய்ததாகவும், தனது மனநிலை சரியானதும் தான் இன்று கிளிநொச்சிக்கு திரும்பி உள்ளதாகவும் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் நான் கடன் காரணமாக தலைமறைவாகவில்லை எனவும் தனது வாக்குமூலத்தில் பதிவிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.