பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வெகுவிரைவில் அறிவிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் சி. பி.ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணி வெற்றிப் பெறுமா, தோல்வியடையுமா என்பது எதிர்பார்க்கப்படுகின்றது. பரந்துப்பட்ட கூட்டணி வெற்றிப் பெற்றதும் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் இந் நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் என்றும், அதனை தொடர்ந்து அமைக்கவுள்ள அரசாங்கத்தில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமை அவரது தனிப்பட்ட தீர்மானமாகும்.
எவரது தலைமைத்துவத்திலான அரசாங்கம் உருவாக வேண்டும் என்பதை பெரும்பாலான மக்கள் தீர்மானித்து விட்டார்கள். அரசாங்கம் ஏதாவது ஒரு தேர்தலை நடத்தினால் மக்களிள் தீர்மானம் நிரூபிக்கப்படும். பொதுஜன பெரமுனவினால் தனித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற முடியாது என்ற கருத்தினை திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.