கிளிநொச்சியில் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்ட 4 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பொலிசாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது 4 லட்சம் ரூபா பெறுமதியான மர குற்றிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெலிக்கன்னவின் கட்டளைக்கமைய மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே இவ்வாறு மரக்குற்றிகளும், அதனை எடுத்து சென்ற கப்வாகனமும் பொலிசாரால் மீட்கப்பட்டது.
குறித்த கப் வாகனத்தினை பாதுகாப்பாக எடுத்து செல்ல உதவிய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த மரக்குற்றிகள் எடுத்து செல்லப்பட்ட மரக்காலை அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருந்தமையால், குறித்த மரக்காலையில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டது.
மீட்கப்பட்ட மரக்குற்றிகளின் பெறுமதி 4 இலட்சம் எனவும், விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.