சீனர்களுக்காக அந் நாட்டு சிகரெட்டுக்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
புகையிலை பாவனை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிராக ஜனாதிபதி பிரத்தியேகமான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். தற்போது போதைப்பொருள் பாவனை முடிந்த அளவிற்கு கட்டுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கும் புனருத்தாபனமும் வழங்கப்படுகின்றது. போதைப்பொருள் ஒழிப்பு என்பது தேசிய கொள்கையாக முன்னெடுத்து செல்லப்படுகின்றது.
ஆகவே ஒவ்வொரு நாட்டவர்களின் தேவைகளுக்காhக நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கும் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.