கடந்த 15ம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 900 மெகாவோட் மின்சாரம் இலங்கை மின் கட்டமைப்பில் இருந்து குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய இன்றில் இருந்து (17) எதிர்வரும் 21ம் திகதி வரை காலை இரண்டரை மணித்தியாலங்களும் இரவு ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை கொழும்பு நகர் பகுதிகள், வைத்தியசாலைகள், தொழில் வலையங்கள் ஆகியன இதனால் பாதிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.வடக்கு மாகாணத்தில் மின் விநியோகம் தடைப்படும் முழுமையான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.