மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg

2210 0

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி அமைப்பினரால் வருடம் தோறும் நடத்தாப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி கொம்பூர்க் என்னும் நகரில் யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்திற்கான போட்டியாக மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யேர்மனியில் உள்ள தமிழாலயங்களின் மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து ஐந்து மாநிலங்களில் இப்போட்டிகள் நடாத்தப்படுகின்றது. பின் ஐந்து மாநிலங்களிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவ, மாணவிகளை இணைத்து இறுதிப் போட்டி 21.9.2019 அன்று நொய்ஸ்(Neuss) நகரத்தில் நாடாத்தத் தீர்மானித்துள்ளார்கள்.

கொம்பூர்க் நகரத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அந்த மாநிலத்தில் உள்ள பத்துத் தமிழாலயங்கள் பங்குபற்றிருந்தனர். நிகழ்வில் யேர்மனியத் தேசியக் கொடி முதல் ஏற்றப்பட்டு பின்பு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டு தமிழாலய விளையாட்டு வீர வீரங்கணைகளினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழாலய மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்று விளையாட்டுக்கள் ஆரம்பமாகின.
அண்ணளவாக 200ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபற்றிய இவ் விளையாட்டுப் போட்டிகள் மாலை எட்டு மணியளவில் நிறைவடைந்தது.

தொடர்ந்து மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டி 13.07.2019 சனிக்கிழமை நொய்ஸ்(Neuss), நகரத்திலும்,வடமத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டி 29.06.2019 சனிக்கிழமை ஆர்ன்ஸ்பேர்க்(Arnsberg) நகரத்திலும், தென்மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டி 6.7.2019 சனிக்கிழமை புறூக்சால்(Bruchsal) நகரத்திலும், வடமா நிலத்திற்கான விளையாட்டுப் போட்டி 7.9.2019 சனிக்கிழமை ஒஸ்னாபுறூக்(Osnabrück) நகரத்திலும் நடாத்துவதற்கு ஏற்பாடாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.