தென் அமெரிக்காவில் உள்ள லத்ததீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா எண்ணை வளம் மிக்கது. சமீப காலமாக அங்கு பொருளாதார மந்த நிலை நிலவுகிறது, நிர்வாக சீர்கேடு, சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை சரிவு உள்ளிட்ட பல காணரங்களால் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே அதிபர் பதவியில் இருந்து நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. நாட்டில் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பொருட்கள் உற்பத்தியால் பாதிப்பு எற்பட்டுள்ளது. மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை.
உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சாப்பாட்டுக்கும், குடி தண்ணீருக்கும் பொது மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மக்களுக்கு உணவு பொருட்கள் ரேசன் முறையில் வழங்கப்படுகிறது.
அவை போதுமான அளவில் இல்லை. எனவே அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், மற்றும் வணிக வளாகங்களில் புகுந்து பொருட்களை மக்கள் சூறயாடியும் கொள்ளையடித்தும் வருகின்றனர்.
அரசு குடோன்களுக்கு உணவு தானியங்களை ஏற்றி வரும் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன. தெருக்களில் இறங்கி பொது மக்கள் போராட்டம் நடத்துகின்றன. போதிய அளவு உணவு பொருட்கள் வினியோகம் செய்ய வலியுறுத்துகின்றன. அதனால் அங்கு புரட்சி வெடிக்கும் சூழ்நிலை உள்ளது.