பிரதமர நீதியரசர் ஸ்ரீபவன் வசம் நாட்டு நிர்வாகம் இருக்கவில்லை – சபாநாயகர்!

406 0

karu-jayasuriyaசிறீலங்காவின் ஆட்சியாளர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் ஒரே தடவையில் வெளிநாடு சென்றுள்ளதால் நாட்டின் அரச நிர்வாகத்திற்கு பிரதம நீதியரசர் ஸ்ரீபவனே பொறுப்பாக உள்ளார் என வெளிவந்த தகவலில் உண்மையில்லையென சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெல்ஜியத்திற்கும், சபாநாயகர் கருஜெயசூரிய சீனாவுக்கும் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், நாட்டின் நான்காவது நிர்வாக தலைமைப் பொறுப்பிலுள்ள பிரதம நீதியரசரிடம் அரச நிர்வாகம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

நாட்டில் சிறீலங்கா ஆட்சியாளர், பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் நாட்டில் இல்லாதநிலையில் இவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் பிரதம நீதியரசர் தலைமைப்பொறுப்பை ஏற்று நடாத்த முடியும்.

அந்த வகையிலேயே பிரதமர நீதியரசர் அரச நிர்வாகத்தைப் பொறுப்பேற்றிருந்ததாக கூறப்பட்டது.

எனினும், சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டை விட்டு வெளியேற முன்பே தான் நாடு திரும்பிவிட்டதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.