வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரித்தானியா பயணமாகியுள்ளதால், அவர் நாடு திரும்பும் வரை தற்காலிகமாக வடக்கு மாகாண முதலமைச்சராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன், வடக்கு மாகாண முலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குக் கீழ் செயற்பட்ட அமைச்சுக்கள் யாவும் குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசனிடம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.