சோனியா காந்தியை சந்தித்தார் ஆங் சான் சூகி

363 0

201610172249166000_aung-san-suu-kyi-meets-sonia-gandhi_secvpfமியான்மர் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், அரசு ஆலோசகருமான ஆங் சாங் சூகி 3 நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.

தனது பயணத்தின் முதற்கட்டமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஆங் சாங் சூகி சந்தித்தார்.
புதுடெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது இந்திய-மியான்மர் நாடுகளிடையேயான உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான கரன் சிங் உடன் இருந்தார்.

முன்னதாக சூகியை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை மந்திரி நிர்மலா சீத்தாராமன் தலைநகர் புதுடெல்லியில் வரவேற்றார்.

ஆங் சான் சூகி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

தனது பயணத்தின் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி சுஸ்மா சுவராஜ் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

240dfb1d-e7c2-4bac-bfaf-21086adae774_l_styvpf