தனியார் மருத்துவமனை தீவிபத்து – 22 பேர் உயிரிழப்பு

310 0

201610172335074468_at-least-22-killed-many-injured-in-private-hospital-fire-in_secvpfஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தீ பிடித்தது.

உடனடியாக 5 தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பின்னர் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்றது.

இந்த தீ விபத்தில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக குர்தா மாவட்ட கலெக்டர் நிரஞ்சன் சாகு தெரிவித்தார். இருப்பினும் இந்த விபத்தில் 22 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் புவனேஸ்வர் நகரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.