அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளன – சீனா

331 0

201610180528534989_brics-balancing-influence-against-us-dominated-world-order_secvpfபிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 2ஆம் நாள் மாநாடு கோவா மாநிலத்தின் பெனாலிம் கிராமத்தில் நடந்தது.

இந்தநிலையில், சர்வதேச அளவில் பனிப்போருக்கு பின் அமெரிக்காவின் ஆதிக்கத்தை பிரிக்ஸ் நாடுகள் மாற்றி புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்
மேற்கத்திய வளர்ந்த நாடுகளை மையமாக கொண்டு உள்ள சர்வதேச அரசியல் சூழலை மாற்றுவதற்கு பிரிக்ஸ் நாடுகள் உதவிக் கொண்டிருக்கிறது.

பனிப் போருக்கு பிந்தைய சூழலை, அமெரிக்க ஆதிக்கத்தை பிரிக்ஸ் நாடுகள் மாற்றியுள்ளது. உலக பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான உந்து சக்தியாக பிரிக்ஸ் நாடுகள் மாறியுள்ளது.
உலகமயமாக்கல் வளர்ச்சிக்கு திரும்பியுள்ளதை இது காட்டுகிறது.

பிரிக்ஸ் நாடுகள், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகியவை மேற்கத்திய தாக்கம் மற்றும் பின் காலனியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.