நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பௌத்த மதத்திற்கு எதிராக சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற நிழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டார்.
இது வரையில் 48 பிக்குகள் கைது பல்வேறு விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட மத ரீதியான சுதந்திரம் மற்றும் புத்துணர்ச்சி என்பன தற்போது குறைந்து வருகின்றது.
பிக்குவாதத்திற்கு சிறுவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்கள் கூட இன்று காவல் விசாரணைக்கு செல்ல வேண்டிய நிலையே காணப்படுகின்றது. பௌத்த மதத்திற்கு எதிரான செயற்பாடுகளும் சூழ்ச்சிகளும் நல்லாட்சியில் காணப்படுகின்றது எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.