ஆட்சிக்கு வந்த இந்த 4 வருடங்களில், இலங்கையிலிருந்து பௌத்தத்தை அழிக்கும் செயற்பாட்டையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கலவான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த அரசாங்கம் கடந்த 4 வருடங்களாக பௌத்த தர்மத்துக்கு எதிரான செயற்பாடுகளையே மேற்கொண்டிருந்தது.
பௌத்தத்தை அழிக்கும் நோக்கிலேயே பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருபாலின திருமணத்தை சட்டமாக்க வேண்டும் உள்ளிட்ட பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இவையணைத்தும் அரசாங்கத்தில் உள்ளவர்களின் கொள்கைகளாகும். சர்வதேசம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் கொள்கைகளுக்கு இணங்கவே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
மதமொன்றே தேவையில்லை என்ற நோக்கத்தில்தான் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களால்தான் அன்று நாம் தோற்கடிக்கப்பட்டோம்.
தற்போது ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை இதில் உள்ள உறுப்பினர்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பது சந்தேமாகும். இவ்வாறு பல குறைப்பாடுகள் உள்ளன” என மேலும் தெரிவித்ததார்.