வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ராஜினாமா!

388 0

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளராக இருந்த சாரா சாண்டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பிக்கைக்குரியவர் சாரா சாண்டர்ஸ். இவர் ஒருமுறை, டிரம்ப் ஜனாதிபதி ஆக வேண்டுமென கடவுளே விரும்புகிறார் எனக்கூறி அனைவரது கவனத்தையும் பெற்றவர். வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சாரா சாண்டர்ஸ் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், மூன்றரை ஆண்டுகளாக சிறப்பான பணிக்கு பிறகு, சாரா சாண்டர்ஸ் இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார். சாரா அற்புதமான திறமைகளுடன் கூடிய மிக சிறப்பான நபர். அவர் சிறப்பான பல பணிகளை செய்திருக்கிறார். நன்றி சாரா என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சாரா சாண்டர்ஸ் கூறுகையில், எனக்கு வழங்கப்பட்ட பணி என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அளிக்கப்பட்ட கவுரவம். நான் தற்போது எனது குழந்தைகளுடன் இருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். நான் பணிபுரிந்த அனைத்து நேரத்தையும் விரும்பினேன். எனது துயர நாட்களையும் சேர்த்துதான் என தெரிவித்துள்ளார்.