இராணுவப் பாதுகாப்பை அகற்ற வேண்டாம் என கோத்தா உத்தியோகபூர்வமாக கோரவில்லை

5095 0

global_dialog_20150917_04p3இராணுவப் பாதுகாப்பினை அகற்ற வேண் டாம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ உத்தியோகபூர்வமாக கோரவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள் ளார்.

கோத்தபாய ராஜபக் ஷ ஊடகங்களின் ஊடாக கோரிக்கை விடுத்திருந்த போதிலும், பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் தம்மிடம் அது பற்றி எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப் பினை நீக்கிக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இதனை நீக்க வேண்டாம் என கோருவதாகவும் நேற்று முன்­தினம் கோத்தபாய ராஜபக் ஷ ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

எவ்வாறெனினும், எதிர்வரும் காலங்களில் கோத்தபாயவிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்­பிட்­டுள்­ளார்.

Leave a comment