கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

421 0

வேயன்கொட – குருந்தவத்த பகுதியில் கிணறொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேயன்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்தவத்த பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

குருந்தவத்த பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய மந்திரா யஷ்மின் குணவர்தன எனப்படும் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இவர் தனியாகவே வசித்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வேயன்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.