உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மர ஆலை உரிமையாளர்கள்

391 0

மொரட்டுவ மர ஆலை உரிமையாளர்கள், மொரட்டுவ நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டித்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மர ஆலைகளை தடை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள  தீர்மானத்துக்கு எதிராக மொரட்டுவ மர ஆலை உரிமையாளர்கள், மொரட்டுவ நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நேற்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்ந்து சில நாட்களாக இடம்பெற்று வந்த சத்தியாக்கிரக போராட்டத்தின் பின்னரே சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்தப் போராட்டத்தில் மத குருமார்களும் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.