ஹொரவப்பொத்தானை பகுதியில் தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்பினை பேணியதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விடுவிப்பதற்காக ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், சந்தேகநபரின் வழக்கறிஞர் சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்ட போதும் சந்தேகநபரை நீதிவான் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தௌஹீத் ஜமாஅத்தின் தொடர்பை பேணிய சந்தேகநபரை விடுவிக்குமாறு கூறி ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவருக்கான விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.