எதிர்காலத்தில் மேற்கத்திய வைத்தியர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஆயுர்வேத வைத்தியர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
நாட்டில் பயன்படுத்தப்படும் ஆரோக்கியத்திற்குப் பாதகமான உணவுப் பொருட்கள் தொடர்பில் சோதனைகளை மேற்கொள்வதற்கு சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரசாயன கூடமொன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத சமூக சுகாதார வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக 2016 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறான பதவி நிலையை ஏற்படுத்தி ஆயுர்வேத பட்டதாரிகளை இந்தப் பதவிகளில் நியமித்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.