சீனாவில் சுரங்க விபத்து- 9 பேர் உயிரிழப்பு!

328 0

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் சுரங்கம் இடிந்து விழுந்ததில், அதில் பணியாற்றிய 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜிலின் மாகாணத்தில் ஜிலின் லாங்ஜியாபோ சுரங்கம் உள்ளது. இங்கு உள்ளூர் நேரப்படி நேற்று இரவு சுமார் 8 மணியளவில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், தொழிலாளர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று, சுரங்க இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.