இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் குறித்தான கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கை இன்று கோப் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது. அத்துடன் குறித்த விசாரணை மீதான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இன்றைய தினமே தீர்மானிக்கப்படும்.
ஒருவேளை இந்த விசாரணையின் இறுதி முடிவு இன்றைய தினம் எடுக்க கூடும் என கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார் .இலங்கை மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் வினவிய போதே கேசரிக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறியை ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தன்னுடைய உறவினருக்கு வழங்கியமை தொடர்பில் பெரும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன . இதன்படி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை உடனடியாக பதவி விலகுமாறு எதிரணியினர் போராட்டங்களை நடத்திய வலியுறுத்தி வருகின்ற னர். இதன்படி இது தொடர்பில் கணக்காய்வு திணைக்களத்தினால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறித்த விசாரணைகளின் பிரகாரம் மத்திய வங்கியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலான அறிக்கை முழுமையாக பூர்த்தியாகி உள்ளது .
இதேவேளை பாராளுமன்ற த்தின் கோப் குழுவிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்ப்டுவருகின்றன. கோப் குழுவின் விசாரணை யின் போது மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனும் பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் அளித்திருந்தார். இதன்போது கோப் குழு அர்ஜூன மகேந்திரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது. இதன் வாக்குமூலம் கணக்காய்வு திணைக்களத்திடமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கை ஆதிக்கம் செலுத்த கூடியதாக அமையும் கணக்காய்வாளர் நாயகம் காமினி அபேசிங்க கலந்து கலந்துகொண்டு கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கையை கையளிக்கவுள்ளார்.இது தொடர்பில் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிடுகையில்,
மத்திய வங்கி பிணை முறி மோசடியில் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தொடர்புபட்டுள்ளரா? என்பது குறித்த உண்மை தன்மை கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கை மூலமாக வெ ளிவரும். எனினும் இதன் அடுத்த கட்ட நகர்வை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து கோப் குழுவின் இன்றைய அமர்வின் போது தீர்மானிக்கப்படும்.அத்துடன் மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் இறுதி முடிவினை இன்றைய தினம் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.