சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதியை மீண்டும் களமிறக்குவது என்ற ஒருமித்த நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தொடர்ந்தும் ஜனாதிபதியாகவும், பொதுஜன பெரமுனவில் ஒருவர் பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டும் என்று நிலைப்பாட்டையும் தயாசிறி ஜயசேகர முன்வைத்துள்ளார்.
இதுவும் கட்சி ரீதியான தீர்மானம் அல்ல. அது ஒரு யோசனை மாத்திரமேயாகும். கூட்டணி அமைப்பது உறுதியானால் அடுத்தடுத்த கட்டங்கள் இவை குறித்து கவனம் செலுத்தப்படும்.
சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதியை மீண்டும் களமிறக்குவது என்ற ஒருமித்த நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். எனினும் ஏனைய கட்சிகளில் இந்த ஒற்றுமை கூட இல்லை என்பதை அவதானிக்க முடிகின்றது.
சுதந்திரக் கட்சி மாத்திரமல்ல வேறு எந்த கட்சியும் இன்னும் தமது கட்சிக்கான வேட்பாளரை தெரிவு செய்யவில்லை.
தேர்தலில் யார் போட்டியிட்டாலும் அதற்கு நாம் முக்கியத்துவம் வழங்கப்போவதில்லை. எமக்கு வேலைத்திட்டங்களே முக்கியமாகும்.