தேர்தல் தோல்வி எதிரொலி: மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் ராஜினாமா

307 0

கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. அங்கு ஆளும் காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணி தலா 1 தொகுதிகளில் வென்றது. மேலும் மாண்டியா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக  போட்டியிட்ட சுமலதா வென்றிருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் ஹெச்.விஸ்வநாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தான் இதற்கு முன்னதாக இருமுறை ராஜினாமா செய்ய முயன்றதாகவும், தேவகவுடா அறிவுறுத்தியதால் அந்த முடிவை மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.