அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இங்கிலாந்து சென்றுள்ளனர். ராணி எலிசபெத் அரண்மனையில் மெலனியா டிரம்ப், டிரம்ப் மறந்த ஒன்றை நியாபகப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளனர். இங்கிலாந்து அரசு மற்றும் ராணி எலிசபெத் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது ஒரு குறிப்பிட்ட குதிரை சிலையை ராணி காண்பித்து, இது நியாபகம் இருக்கிறதா என கேட்டுள்ளார். அதற்கு டிரம்ப் நியாபகம் இல்லை என கூறியுள்ளார்.
அவரது அருகில் இருந்த மெலனியா, ‘இது நீங்கள் ராணிக்கு ஒரு வருடத்திற்கு முன் பரிசாக அளித்தது’ என நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும் சந்திப்பின்போது ராணி எலிசபெத், 1959ம் ஆண்டு வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய ‘இரண்டாம் உலகப் போர்’ எனும் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.