குருணாகல் வைத்தியருக்கு எதிராக 500 இற்கும் அதிகமான முறைப்பாடுகள்

322 0

கைது செய்யப்பட்டுள்ள செய்கு சியாப்தீன் மொஹமட் ஷாபி வைத்தியருக்கு எதிராக குருணாகல் வைத்தியசாலைக்கு இன்று (03) பகல் வரையில் 500 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொஹமட் ஷாபி வைத்தியர் சிசேரியன் சிகிச்சை செய்த பின்னர் இதுவரையில் தங்களுக்கு கருத்தரிக்கவில்லை என தெரிவித்து இன்று 28 தாய்மார்கள் குருணாகல் வைத்தியசாலையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரையில் மொத்தமாக 505 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வைத்தியருக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.