யேர்மனியில் குக்குள்கோவன் (Hückelhoven) என்னும் நகரில் 2 ஆம் லெப் மாலதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாக தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்துகொண்டு 2 ஆம் லெப் மாலதிக்கு தமது வீர வணக்கத்தை, மலர் தூவியும் தீபமேற்றியும் உணர்வுபூர்வமாக செலுத்திக் கொண்டனர்.தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமான நிகழ்வில் பல கலை நிகழ்வுகளும் சிறுவர்களின் நடனங்கள்;, கவிதைகள் ,பேச்சுக்கள், மற்றும் நாடகம் என்பவற்றுடன் புரட்சிகானங்களும் இசைக்கப்பட்டது.